செய்திகள்

பள்ளியில் துப்பாக்கி சூடு எதிரொலி- அமெரிக்காவில் மாணவர்கள் தற்காப்புக்கு கற்கள் வினியோகம்

Published On 2018-03-24 05:30 GMT   |   Update On 2018-03-24 05:30 GMT
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கு தற்காப்புக்காக கற்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

புளோரிடா:

அமெரிக்காவில் கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள பார்க்லேண்ட் பள்ளியில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறுகிறது.

எனவே துப்பாக்கி வைத்திருப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் பென்சில் வேனியாவில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தற்காப்புக்கு கற்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆற்றுப் படுகையில் இருந்து சேகரிக்கப்பட்ட கருங்கற்கள் வாளிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி நபர் பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாணவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக தொடங்கும். அதையும் மீறி முடியாத பட்சத்தில் வகுப்பறைக்குள் நுழையும் துப்பாக்கி நபர் மீது கற்களை கொண்டு சரமாரி தாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்தகவலை புளோரிடா மாகாண கல்வித்துறை கூட்டத்தில் புளூ மவுண்டன் பள்ளிமாவட்ட சூப்பிரண்டு டேவிட் ஹெல்செல் தெரிவித்தார். பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் 5 காலன் கற்கள் வாளிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த செய்தி அமெரிக்க பத்திரிகையில் வெளியாகி அனைவரின் ஆதரவையும் பெற்றுள்ளது. #tamilnews

Tags:    

Similar News