செய்திகள்

லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிப்

Published On 2017-12-17 12:15 GMT   |   Update On 2017-12-17 12:15 GMT
புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக இன்று லாகூர் வந்தடைந்தார்.
இஸ்லாமாபாத்:

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிபின் மனைவி குல்சூம் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை காண்பதற்காக லண்டன் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என தனக்கெதிரான ஊழல் வழக்கு விசாரணையின்போது நவாஸ் ஷெரிப் நீதிபதியிடம் கேட்டு கொண்டார்.

டிசம்பர் 5-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை ஒருவார காலம் விசாரணையின்போது நேரில் ஆஜராக விலக்களித்து நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, நவாஸ் ஷெரிப் இன்று மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் இன்று லாகூர் நகரை வந்தடைந்தனர். லாகூர் விமான நிலையத்தில் ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News