செய்திகள்

மலேசியாவில் கட்டுமான பணியின் போது நிலச்சரிவு: 3 தொழிலாளர்கள் பலி

Published On 2017-10-22 05:50 GMT   |   Update On 2017-10-22 05:50 GMT
மலேசியாவில் கட்டுமான பணியின் போது நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானர்கள். 11 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

கோலாலம்பூர்:

மலேசியாவின் வடக்கு பகுதியில் பெனாங் நகரம் உள்ளது. சுற்றுலா தளமான இங்கு மலைப் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது.

கட்டுமான பணியில் இந்தோனேசியா, மியான்மர் மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

33 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதில் காண்கிரீட் போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.


உடனே அங்கிருந்து வெளியேற தொழிலாளர்கள் முயற்சி செய்தனர். அதற்குள் மண் அவர்கள் மீது அமுக்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்தனர்.

புல்டோசர் மூலம் மண் அகற்றப்பட்டது. இருந்தும் 3 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டது. அவர்களில் 2 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என தெரியவில்லை.


இவர்கள் தவிர 11 பேர் மண்ணில் உயிருடன் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அவர்கள் சுமார் 15 அடி ஆழத்தில் மண் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்பதில் சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News