இந்தியா

காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்

Published On 2024-05-24 04:26 GMT   |   Update On 2024-05-24 05:58 GMT
  • ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறப்பட்டிருந்தது.
  • போலீசாரை அணுகி தெளிவுபடுத்திய பிறகும், போலீசார் அபராத பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய நிலையில், காரில் செல்லும் நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து ஓட்டும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங் பரிகார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் இருசக்கர வாகனம் ஓட்டவில்லை. தனது ஆடி காரில் சென்ற நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் போலீசாரை அணுகி தெளிவுபடுத்திய பிறகும், போலீசார் அபராத பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. மாறாக தேர்தல் முடிந்த பிறகு இந்த பிரச்சனை குறித்து பரிசீலிப்பதாக கூறி உள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த பகதூர்சிங் தற்போது காரில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ஹெல்மெட் இல்லாமல் எனது காரை ஓட்டியதற்காக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதனால் நான் என் காரை ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் அபராதம் விதித்தால் என்ன செய்வது? என கூறி உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News