இந்தியா

SpiceJet | மதுரை - துபாய் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடக்கம்

Published On 2026-03-11 08:16 IST   |   Update On 2026-03-11 08:16:00 IST
  • மதுரை விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி விமானங்களின் சேவை மார்ச் 2 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
  • போர் காரணமாக எட்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்காசிய பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி விமானங்களின் சேவை மார்ச் 2 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எட்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை - துபாய் இடையே இன்று முதல் விமான சேவை தொடங்குகிறது.

மதுரை, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு, அகமதாபாத், டெல்லி, மும்பையில் இருந்தும் துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவையை தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News