இந்தியா

மேகாலயா கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல்: ராணுவம் குவிப்பு

Published On 2026-03-10 21:06 IST   |   Update On 2026-03-10 21:06:00 IST
  • தேர்தல் மனுத்தாக்கலின் போது இரு பிரிவினருக்கு இடையில் மோதல்.
  • பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் மனுதாக்குதலின்போது இரு பிரிவனருக்கு இடையில் அதாவது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வன்முறையாக வெடித்துள்ளது.

இதனால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மனுதாக்கலின்போது ஏற்பட்ட வன்முறையின்போது வன்முறை கும்பலை கலைக்க பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனை காலம் (Column) குவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிட நிர்வாகம் மறுத்துள்ளது. ஒரு Column என்பது 60 முதல் 80 வீரர்கள் கொண்ட குழு ஆகும்.

இந்த சம்பவம் சிபினாங் என்ற பகுதியில் நடைபெற்றதாக மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News