இந்தியா

IndiGo CEO ராஜினாமா: உடனடியாக ஏற்றுக் கொண்ட நிறுவனம்

Published On 2026-03-10 19:26 IST   |   Update On 2026-03-10 19:26:00 IST
  • கடந்த டிசம்பர் மாதம் கடுமையான போக்குவரத்து இடையூறுகளை சந்தித்தது.
  • விமானங்கள் தரையிறக்கப்பட்டால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக நிறுவனம் உடனடியாக அறிவித்து, நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க நிர்வாக இயக்குநர் ராகுல் பாடியாவை இடைக்கால தலைவராக நியமித்துள்ளது.

இண்டிகோ கடந்த 3 மாதங்களாக மிகப்பெரிய அளவில் விமான போக்குவரத்து இடையூறை சந்தித்தது. இதனால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளானார்கள். டிஜிசிஏ இண்டிகோ நிறுவனத்திற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

எல்பர்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இண்டிகோவின் சிஇஓ-வாக பதவி ஏற்றார். இண்டிகோ கடந்த டிசம்பர் மாதம் தனது சேவைகளில் கடுமையான குளறுபடிகளை சந்தித்தது, விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. 100-க்கும் அதிகமான விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டது. இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News