இந்தியா

'பைக்'கில் முத்தமழை பொழிந்து சாகச பயணம் செய்த இளம்ஜோடி

Published On 2024-05-24 04:13 GMT   |   Update On 2024-05-24 04:13 GMT
  • வாலிபர் மீதும், அவருடன் சென்ற இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இளம்ஜோடிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

சமீபகாலமாக பைக்குகளில் இளம் ஜோடிகள் சாகசங்கள் செய்வது, அத்துமீறி நடப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் ஒரு இளம்ஜோடி மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது முத்தமழை பொழிந்தபடி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட அதன் பெட்ரோல் டேங்கில் வாலிபருக்கு எதிர் திசையில் அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் அவரை கட்டிப்பிடித்த நிலையில் பயணிக்கும் காட்சிகள் உள்ளன. அவர்களின் பின்னால் சிலர் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் நிலையில், அந்த ஜோடி எதையும் கண்டுகொள்ளாமல் கட்டிப்பிடித்த நிலையிலும், முத்தமழை பொழிந்து கொண்டே மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் சாகச காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கைத்துன் நகரை சேர்ந்த முகமது வாசிம் (வயது 25) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீதும், அவருடன் சென்ற இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இளம்ஜோடிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

Tags:    

Similar News