தமிழ்நாடு

இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.53,200-க்கு விற்பனை

Published On 2024-05-24 04:22 GMT   |   Update On 2024-05-24 04:22 GMT
  • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
  • கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. இதனிடையே நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,650-க்கும் சவரன் ரூ.53,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைப்போர் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Tags:    

Similar News