செய்திகள்

இந்தோனேஷியா சிறையில் இருந்து இந்தியர் உள்பட 4 வெளிநாட்டு கைதிகள் தப்பி ஓட்டம்

Published On 2017-06-20 00:49 GMT   |   Update On 2017-06-20 00:49 GMT
இந்தோனேஷியா சிறையில் இருந்து இந்தியர் உள்பட 4 வெளிநாட்டு கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலி:

இந்தோனேஷியாவில் உள்ள சிறைகளில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் கைதிகள் அடிக்கடி தப்பி ஓடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் சுமத்ரா தீவில் உள்ள ஒரு சிறையில் இருந்து கடந்த மாதம் மட்டும் 440 கைதிகள் தப்பி ஓடினர்.

அங்குள்ள பாலி தீவின் தலைநகரான தென்பசாரில், கெரோபோகன் சிறைச்சாலை உள்ளது. இங்கு நேற்று காலையில் போலீசார் வழக்கமான சோதனை நடத்தினர். அப்போது 4 கைதிகள் தப்பி ஓடியது தெரியவந்தது. சையது முகமது செத் (வயது 31) என்ற இந்தியரும், ஆஸ்திரேலியா, பல்கேரியா, மலேசியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும் என 4 பேர் தப்பியுள்ளனர்.



சுவரில் இருந்த 50-க்கு 70 செ.மீ. துளை மூலம் அவர்கள் வெளியேறி, அதனுடன் இணைந்துள்ள 15 மீட்டர் நீளம் கொண்ட குடிநீர் குழாய் வழியாக பிரதான சாலையை அவர்கள் அடைந்திருக்கலாம் என தெரிகிறது.

தப்பி ஓடிய சையது முகமது செத் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News