செய்திகள்
எல் முருகன்

சாதி கலவரங்களை ஏற்படுத்த தி.மு.க.-வி.சி.க. சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

Published On 2021-04-17 09:27 GMT   |   Update On 2021-04-17 09:27 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கையை எடுத்து வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலசொக்கநாதபுரம்:

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை அமைக்கும். பா.ஜ.க. போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றிபெறும். தி.மு.க.வினர் தோல்வி பயத்தால் வாக்குப்பெட்டிகளை மாற்றி விடுவார்கள் என்ற குற்றச்சாட்டை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாதி அரசியலை செய்து வருவதால் தமிழக அரசும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பக்தர்களை அனுமதித்து விதிகளுக்கு உட்பட்டு திருவிழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News