செய்திகள்

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் - ராமநாதபுரம் முதலிடம்

Published On 2019-04-29 09:31 GMT   |   Update On 2019-04-29 09:31 GMT
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. #SSLC #SSLCResult
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 131 அரசு பள்ளிகளில் 5757 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 5657 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.26 சதவிகிதமாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு பள்ளிகளை சேர்ந்த 4977 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 4863 பேர் வெற்றி பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தது. தேர்ச்சி விகிதம் 97.71 சதவீதமாகும்.

97.64 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது. 11,113 பேர் தேர்வு எழுதியதில் 10,851 பேர் தேர்ச்சி பெற்றனர். 4-வது இடத்தை நாமக்கல் மாவட்டம் பிடித்தது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.63 ஆகும்.

சென்னை மாவட்டத்தில் 28 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 90.27 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 229 பள்ளிகளை சேர்ந்த 16,747 பேர் தேர்வு எழுதியதில் 14,429 பேர் வெற்றி பெற்று 86.10 சதவீதம் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 86.67 சதவீதமாகும். வேலூர் மாவட்டம் 86.85 சதவீதமும் பெற்றுள்ளன. #SSLC #SSLCResult

Tags:    

Similar News