தமிழ்நாடு

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் வைகோ

Published On 2024-05-27 07:11 GMT   |   Update On 2024-05-27 07:11 GMT
  • அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைகோ தங்கி இருந்தார்.
  • இன்று மாலை அல்லது நாளை வைகோவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் நெல்லை சென்றார்.

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் அவர் தங்கினார். இரவில் எதிர்பாராதவிதமாக வைகோ கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் வைகோ இன்று பிற்பகல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். டாக்டர்கள் ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை வைகோவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News