செய்திகள்

வேளச்சேரி- மவுண்ட் பறக்கும் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்

Published On 2018-11-27 06:13 GMT   |   Update On 2018-11-27 06:13 GMT
வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. #FlyingTrainProject
சென்னை:

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. பறக்கும் ரெயிலில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பறக்கும் ரெயில் திட்டத்தை வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

தெற்கு ரெயில்வே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பறக்கும் ரெயில் திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளில் ஈடுபட்டு வந்தது.

நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது. நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் பணம் கேட்டு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு படி சதுர அடிக்கு ரூ.3,151 வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சதுர அடிக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கேட்டு வந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 40 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிகாரிகள் மீண்டும் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

பறக்கும் ரெயில் திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004-ல் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. 2007-ல் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

நிலம் கையகப்படுத்துவது குறித்து குடியிருப்புவாசிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #FlyingTrainProject
Tags:    

Similar News