செய்திகள்
கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சிராணி பேசியபோது எடுத்தபடம்.

பஸ் கட்டண உயர்வு: மகிளா காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் நடத்தப்படும்: மாநில தலைவர் ஜான்சிராணி

Published On 2018-01-22 12:25 GMT   |   Update On 2018-01-22 12:25 GMT
பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறா விட்டால் மகிளா காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஜான்சிராணி தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி கலந்து கொண்டார்.

பொதுமக்களை பெரிதும் பாதிக்ககூடிய பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவேதமிழக அரசு பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் மகிளா காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபு சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை என்னிடம் கூறினார்.

இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளை தமிழக எல்லையோர பகுதிகளில் கொட்டுவதாக தகவல் வந்துள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மீண்டும் திறப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கைபாதிக்கப்படும். எனவே டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மயூரா ஜெயகுமார், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவிதா மற்றும் மாவட்ட தலைவர்கள் உமா மகேஷ்வரி, சுடர் விழி உடனிருந்தனர். #tamilnews
Tags:    

Similar News