செய்திகள்

கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன் பேச்சு

Published On 2017-10-11 10:35 GMT   |   Update On 2017-10-11 10:35 GMT
கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் நலக் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களின் கல்வி உரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பதிவாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர் நல கூட்டமைப்பு தலைவர் சீமான் இளையராஜா வரவேற்று பேசினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லா உரிமைகளுக்கும் வாசல் கல்விதான். அதனால் தான் கல்வி மூலம் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் தான் கல்வி உரிமையை பற்றி பேசுகிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொவரும் பெற்று தீர வேண்டிய உரிமை கல்வி உரிமையாகும், கல்வி இன்றைக்கு வணிகமயமாகி விட்டது. பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. கல்வியை பரவலாக்க ஆளுபவர்களுக்கு விருப்பம் இல்லை.

எல்லோரும் கல்வி சுற்றுவிட்டால் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று நினைக்கிறார்கள். ஜனநாயகத்தை அங்கீகரித்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசுதான் மக்கள் அரசு. 100 சதவீத மக்கள் கட்டணமின்றி கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும். வேறு எந்த இலவசமும தேவை இல்லை. நீ இந்த கல்விதான் படிக்க வேண்டும் என்று திணிக்க கூடாது. நான் என்ன படிக்க வேண்டும் என்பதை நானே தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News