உலகம்

இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

Published On 2024-05-06 11:51 GMT   |   Update On 2024-05-06 11:51 GMT
  • இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ரஃபா நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் ஏழு மாதங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஃபா நகரைத் தவிர்த்து ஏறக்குறைய முக்கியமான நகரங்களில் இஸ்ரேல் தடைவழி தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐ.நா. மற்றும் அமெரிக்க இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்திய வருகிறது.

இதனால் இரண்டு பக்கத்திலும் இருந்து பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்போகிறோம். இதனால் ரஃபா நகரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஃபா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஃபாவில் வசிக்கும் மக்களை மனிதாபிமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அல் மவாசி, கான் யூனிஸ் பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒரேயொரு முறை இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 100 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தினர். ஒரு பிணைக்கைதிக்கு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டள்ள 3 பாலஸ்தீன மக்கள் என்ற வகையில் இஸ்ரேல் விடுதலை செய்தது.

ஏழு நாட்களுக்கு பிறகு ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், மீண்டும் போரை தொடங்கியது.

காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்த நிலையில், இந்த சண்டையில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஃபா நகரில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News