செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கறுப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள், நர்சுகள் போராட்டம்

Published On 2017-09-28 07:10 GMT   |   Update On 2017-09-28 07:10 GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வரை கலெக்டர் அவதூறாக பேசியதை கண்டித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வரை கலெக்டர் அவதூறாக பேசியதாக கூறி நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இன்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் முகமது ரபி தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெஸ்லின், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் அஷ்ரப், டாக்டர் அமலன், அபுல்காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர், செவிலியர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர். எனினும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி யாற்றினர். இதேபோல மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இன்று டாக்டர்கள், நர்சுகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News