செய்திகள்

ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் - சுப்ரமணியன் சுவாமி கணிப்பு

Published On 2017-08-27 10:20 GMT   |   Update On 2017-08-27 10:20 GMT
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் இணைந்து தமிழகத்தில் சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

இரண்டு அணிகளாக உடைந்த அதிமுக சமீபத்தில் ஒன்றாக இணைந்தது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் இணைந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால், அதிருப்தியில் உள்ள டி.டி.வி தினகரன் தனது பக்கம் எம்.எல்.ஏக்களை இழுத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

22 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி தினகரன் பக்கம் இருக்கும் நிலையில், தமிழக சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு தி.மு.க தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, பரபரப்பாக இருக்கும் அரசியல் சூழ்நிலையை மேலும் பரபரபாக்கும் வகையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.



‘அடுத்து வரும் சில நாட்களில் மு.க ஸ்டாலினும் டி.டி.வி தினகரனும் கூட்டணி அரசை அமைப்பார்கள்’ என தனது பதிவில் சுப்ரமனியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News