செய்திகள்

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை

Published On 2017-05-27 10:05 GMT   |   Update On 2017-05-27 10:05 GMT
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தினர். இதில் குறைபாடுகள் உள்ள 90-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் எடைகற்கள் மற்றும் தராசுகள் குறைபாடு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து தொழிலாளர் துறை ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் காய்கறி மார்க்கெட்டில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

எடைகற்கள் முத்திரையிடப்பட்டுள்ளதா? எலக்ட்ரானிக்ஸ் தராசுகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் குறைபாடுகள் உள்ள 90-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆய்வு குறித்து தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி கூறுகையில், எடைகற்கள், தராசுகள் குறைபாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்வது போன்ற புகார்களை ஜிழிலிவிசிஜிஷி என்ற செயலியை இலவசமாக செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் புகார்களை தெரிவிக்கலாம்.

எந்த இடத்தில் புகார் தருகிறார்களோ அந்த பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சோதனை செய்து அது குறித்த விவரங்களை 3 நாளில் புகார்தாரரின் செல்போனுக்கு தெரிவிக்கப்படும். நடவடிக்கை எடுக்காத புகார்கள் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இருக்கும் என்றார்.

Tags:    

Similar News