செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கனிமொழி

Published On 2017-05-22 10:23 GMT   |   Update On 2017-05-22 10:23 GMT
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
சென்னை:

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலையில் தேனியில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

ஆண்டிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் விபத்தில் சிக்கி நடுரோட்டில் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள்.

அதை பார்த்ததும் கனிமொழி காரை நிறுத்தி கீழே இறங்கி உடன்சென்ற கட்சி நிர்வாகிகள் உதவியுடன் அவர்களை மீட்டு தனது காரில் ஏற்றினார்.

பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர்களை சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News