செய்திகள்

ஜூனியர் உலக கிரிக்கெட்: அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2018-01-23 06:09 GMT   |   Update On 2018-01-23 07:55 GMT
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
புதுடெல்லி:

19 வயதுக்குட்பட்டவர்களான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலையில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 33.3 அளவில் 127 ரன்னில் அணியின் கேப்டன் ஜேசன் சன்கா அதிகபட்சமாக 58 ரன் எடுத்தார் பாம்பர், பென்னிடன், ஜேக்ஸ் தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து 234 ஓவரில் 96 ரன்னில் சுருண்டு பேன்டன் அதிகபட்சமாக 58 ரன் எடுத்தார். லாயிட் போப் 35 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தனர்.

நாளை நடைபெறும் கால் இறுதியில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளும், 25-ந்தேதி நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளும், 26-ந்தேதி இந்தியா-வங்காளதேசம் அணிகளும் மோதுகின்றன.
Tags:    

Similar News