search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரை இறுதி"

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.

    இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக் மற்றும் கால் இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
     
    இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஜார்கண்ட் அணி களமிறங்கியது. அந்த அணியின் விகாஸ் சிங் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சிங் 36 ரன்களும், ஷாபாச் நதிம் 29 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    டெல்லி அணி சார்பில் நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரான்ஷு விஜய்ரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   

    இதைத்தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஜார்க்கண்ட் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கியது. அதனால் டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    டெல்லி அணியின் நிதிஷ் ரானா மற்றும் பவன் நெகி ஆகியோர் 39 ரன்கள் எடுத்தனர். கவுதம் க ம்பீர் 27 ரன்களும் எடுத்தார்.

    இறுதியில், டெல்லி அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தது.

    நேற்று முன் தினம் நடந்த மற்றொரு அரை இறுதியில், ஐதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது. 

    பெங்களூருவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. #VijayHazareTrophy
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் நடால் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை கடுமையாக போராடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு நுழைந்தார். #USOpen2018 #nadal
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) கால் இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தீயமை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

    இதன் முதல் செட்டை நடால் ஒரு புள்ளி கூட பெறாமல் 0-6 என்ற கணக்கில் இழந்தார். அதற்கு அடுத்த இரண்டு செட்டை நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 4-வது செட்டை டொமினிக் வென்றார். வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது செட்டை நடால் கைப்பற்றி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 0-6, 6-4, 7-5, 6-7 (4-7), 7-6 (7-5),

    நடால் இந்த வெற்றியை பெற மிகவும் கடுமையாக போராடினார். 4 மணி 48 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே அவரால் வெற்றிபெற முடிந்தது.

    நடால் அரை இறுதியில் 3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா)வை சந்திக்கிறார். #USOpen2018 #nadal
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை வீழ்த்தி டெல்போட்ரா அரை இறுதிக்கு தகுதி பெற்றார். #USOpen2018 #delPotro
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) சந்தித்தார்.

    இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதியில் நுழைந்தார்.  #USOpen2018 #delPotro
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் நாளை மோதுகின்றனர். #FIFA2018 #WorldCup2018
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

    உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

    அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.

    போக்பா, நிக்கோலா காண்டே ஆகியோர் நடுகளத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். தோல்வி எதையும் சந்திக்காத அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் டிரா செய்தது.

    பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி முன் களத்தில் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

    கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசாட் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் திறமை பெற்றவராக இருக்கிறார்.

    இது தவிர பெலானி, விஸ்டல், கோம்பேனி, நாசெர் சாதிலி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மினுயர் கிரானி 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இயலாது. பெல்ஜியம் அணியின் பலவீனமே பின்களம்தான். அதை சரி செய்வது அவசியம். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது.

    இரு அணிகளும் நாளை மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.

    உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.

    இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #FIFA2018 #WorldCup2018
    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலும் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அர்ஜென்டினாவின் ஸ்வார்ஸ்யினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான நடால் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார். நடப்பு சாம்பியனாக அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தும் ரபேல் நடாலுக்கு டெல்போட்ரோ கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

    மற்றொரு அரை இறுதியில் டொமினிக் திம் (ஆஸ்திரியா)- மார்கோ செச்சினட்டோ (இத்தாலி) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீராங்கனை ஹால்ப் (ருமேனியா)- ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr
    ×