என் மலர்

  நீங்கள் தேடியது "jharkand"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  தியோகார்:

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ தான் போகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி,  மணி சங்கர் ஐயர் மற்றும் சாம் பிட்ரோடா ஆகிய இரு நபர்களை நியமித்திருக்கிறது. இதில் ஒருவர், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டால், ‘ஆமாம் நடந்து விட்டது, அதற்கென்ன?’ என கேள்வி கேட்கிறார். இவர் தான் குஜராத்தில் தேர்தலின்போது என்னை அவதூறாக பேசினார். இப்போது மீண்டும் என்னை தாக்கி பேசுகிறார்.  55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது.  மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன். 

  இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.

  இவ்வாறு அவர் பேசினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy
  பெங்களூரு:

  விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக் மற்றும் கால் இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
   
  இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஜார்கண்ட் அணி களமிறங்கியது. அந்த அணியின் விகாஸ் சிங் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சிங் 36 ரன்களும், ஷாபாச் நதிம் 29 ரன்களும் எடுத்தனர்.

  இறுதியில், ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  டெல்லி அணி சார்பில் நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரான்ஷு விஜய்ரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   

  இதைத்தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஜார்க்கண்ட் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கியது. அதனால் டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

  டெல்லி அணியின் நிதிஷ் ரானா மற்றும் பவன் நெகி ஆகியோர் 39 ரன்கள் எடுத்தனர். கவுதம் க ம்பீர் 27 ரன்களும் எடுத்தார்.

  இறுதியில், டெல்லி அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தது.

  நேற்று முன் தினம் நடந்த மற்றொரு அரை இறுதியில், ஐதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது. 

  பெங்களூருவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. #VijayHazareTrophy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்க்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். #RamvilasPaswan #RahulGandhi
  ராஞ்சி:

  மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டணியை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
    
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை ஓரணியில் திரள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

  ஆனால், இந்த கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை. வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளை பிரிப்பதில் எத்தனை இழுபறி நிலவும் என்பது அப்போது தெரிய வரும்.

  ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும். பிரதமராக நரேந்திர மோடி நிச்சயம் மீண்டும் ஆட்சியை தொடர்வார் என்றார். #RamvilasPaswan #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் உள்ள லோஹர்டகா ரெயில் நிலையம் அருகில் பயணிகள் ரெயில் இன்ஜின் மீது மின்சார வயர் அறுந்து விழுந்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #PassengerTrain
  ராஞ்சி:

  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மண்டலத்தில் லோஹர்டகா ரெயில் நிலையம் உள்ளது. நேற்று காலை ராஞ்சியில் இருந்து லோஹர்டகா செல்லும் பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

  இந்த ரெயில் நக்ஜுவா ரெயில் நிலையத்தை அடைந்தது. அப்போது ரெயிலின் மேலே சென்ற மின் கம்பி திடீரென அறுந்து இன்ஜின் மீது விழுந்தது.

  இதில் இன்ஜினில் திடீரென தீ பிடித்தது. புகை வருவதை க்ண்ட ரெயில் டிரைவர் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த தீ அணைக்கும் கருவி மூலம் தீயை போராடி அணைத்தார். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இன்ஜின் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது  #PassengerTrain
  ×