மத்திய அமைச்சரின் ஷூவை கழற்றி பைஜாமாவை அட்ஜஸ்ட் செய்துவிடும் அரசு அதிகாரி - சர்ச்சை வீடியோ

ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரின் ஷூவை கழற்றி பைஜாமாவை அட்ஜஸ்ட் செய்துவிடும் அரசு அதிகாரி - சர்ச்சை வீடியோ
Published on

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு  உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.

அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com