என் மலர்
செய்திகள்

ஜார்க்கண்டில் பரபரப்பு - பயணிகள் ரெயில் இன்ஜின் மீது மின்சார வயர் அறுந்து விழுந்தது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் உள்ள லோஹர்டகா ரெயில் நிலையம் அருகில் பயணிகள் ரெயில் இன்ஜின் மீது மின்சார வயர் அறுந்து விழுந்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #PassengerTrain
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மண்டலத்தில் லோஹர்டகா ரெயில் நிலையம் உள்ளது. நேற்று காலை ராஞ்சியில் இருந்து லோஹர்டகா செல்லும் பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரெயில் நக்ஜுவா ரெயில் நிலையத்தை அடைந்தது. அப்போது ரெயிலின் மேலே சென்ற மின் கம்பி திடீரென அறுந்து இன்ஜின் மீது விழுந்தது.
இதில் இன்ஜினில் திடீரென தீ பிடித்தது. புகை வருவதை க்ண்ட ரெயில் டிரைவர் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த தீ அணைக்கும் கருவி மூலம் தீயை போராடி அணைத்தார். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஜின் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது #PassengerTrain
Next Story






