செய்திகள்

புரோ கபடி 2017: லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி

Published On 2017-09-16 17:26 GMT   |   Update On 2017-09-16 17:26 GMT
புரோ கபடி 2017ன் இன்றைய லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
புரோ கபடி 2017ன் இன்றைய லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் இடையேயான போட்டி சமனில் முடிந்தது.

ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தற்போது ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெற்ற 'பீ' பிரிவு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 45-42 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாட்னாவின் பிரதீப் நர்வால் 15 தொடுபுள்ளிகளும், உ.பி.யின் நிதின் தோமர் 14 தொடுபுள்ளிகளும் எடுத்தனர்.



முன்னதாக நடந்த மற்றொரு 'பீ' பிரிவு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி 26-26 என சமனில் முடிந்தது.

இன்றைய போட்டிகளின் முடிவில் பாட்னா அணி 46 புள்ளிகளுடன் பீ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, உ.பி. யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன. பெங்கால் வாரியர்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.
Tags:    

Similar News