செய்திகள்

உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: 37 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு பிரபலங்கள் வாழ்த்து

Published On 2017-08-17 17:27 GMT   |   Update On 2017-08-17 17:27 GMT
உலக உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் 37 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு சேவாக், கோலி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டொரண்டோ:

உலக உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் 37 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு சேவாக், கோலி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

7-வது உலக உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுகள் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட 24 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியா சார்பில் 21 பேர் கொண்ட அணி கலந்துகொண்டது.

இந்த தொடரில் பேட்மிண்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டி எறிதல், பளு தூக்குதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட இந்தியாவின் ஜாபி மேத்தீவ் 6 பதக்கங்கள் வென்று அசத்தினார். பெங்களூரை சேர்ந்த சி.வி.ராஜண்ணா 200 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 100 மீ ஓட்டத்தில் தேவப்பா மோர் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர். மற்ற போட்டிகளிலும் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடினர்.

    ஆறு பதக்கங்கள் வென்ற ஜாபி மேத்திவ்

இந்திய அணி மொத்தமாக 37 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் ஆறாவது இடம் பிடித்தது. இதில் 15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.



36 பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், சேவாக், இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல், சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் ட்விட்டர் மூலம் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Tags:    

Similar News