செய்திகள்

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்தது பி.சி.சி.ஐ

Published On 2017-06-23 19:46 GMT   |   Update On 2017-06-23 19:47 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளதால், புதிதாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளதால், புதிதாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது.



இதற்கு கும்ப்ளேவும் விண்ணப்பித்து இருந்தார். பயிற்சியாளரை தேர்வு செய்யும் தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு கும்ப்ளேவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டு கொண்டது. அதற்கு அவரும் முதலில் சம்மதித்தார். ஆனால் அவர் திடீரென்று பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் தலைமை பயிற்சியாளர் இல்லாமலே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று இருக்கிறது. விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலகியது உறுதியானது.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஜுலை 9-ம் தேதி வரை நீட்டித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
Tags:    

Similar News