தமிழ்நாடு

'எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்'- மே தின வாழ்த்து தெரிவித்த பிரேமலதா

Published On 2024-04-30 14:21 GMT   |   Update On 2024-04-30 14:21 GMT
  • ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்
  • உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும்

மே தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் உருவானதே மே தின நாளாகும்.

நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தேமுதிகவின் லட்சியமாகும். வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்.

இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம், ரத்தச்சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும், மே தினம் உழைப்பவர் சீதனம், மே தினம் உழைப்பவர் சீதனம், மே தினம் உழைப்பவர் சீதனம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News