தமிழ்நாடு செய்திகள்
இடியாப்பம் விற்க கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு
- இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்ய உணவு பாதுகாப்புதுறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
- தரமான மாவுகளை பயன்படுத்த, கை மற்றும் தலையில் உறைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பத்தில் தரம் இல்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு கட்டுப்பாடு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், இனி இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறவேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை இதனைப் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான மாவுகளைப் பயன்படுத்தவும், கை மற்றும் தலையில் உறைகள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், நோய்த்தொற்று பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபடவும் உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.