இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
- கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
- ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!
சிவபெருமானுக்குரிய முக்கிய விரத வழிபாடுகளில் ஒன்றான மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டால் பல விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.
அன்றைய தினம் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து இருந்து, சிவ நாமத்தை உச்சரித்தபடி சிவனை வழிபடுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே, 'மகா சிவராத்திரி' என்று போற்றி வணங்குகிறோம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 12 கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. வரும் 15-ந்தேதி 12 கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 9 கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.