என் மலர்
நீங்கள் தேடியது "Bcci"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.
- ஐ.சி.சி.அறிவிப்புக்கு பி.சி.சி.ஐ.வரவேற்பு
- அனைத்து வித உள்கட்டமைப்பு வசதியும் இருப்பதாக பி.சி.சி.ஐ. தகவல்
அடுத்து நடைபெற உள்ள ஐ.சி.சி.உலக கோப்பை தொடர்களுக்கான இறுதிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஆண்டுக்கான பெண்கள் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஆகியோர் வரவேற்றுள்ளனர். 2025 ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எங்களிடம் அனைத்து உள்கட்டமைப்பும் உள்ளது என்றும், இந்த போட்டிகளை வெற்றிகரமாக நாங்கள் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்.
- ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமுக்கு யார் வந்தார் என்று பாருங்கள். ஜாம்பவான் லாரா!" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வீடியோவில் லாராவுடன் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிற வீரர்கள் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது.
Look who came visiting the #TeamIndia dressing room 👏 👏
— BCCI (@BCCI) July 23, 2022
The legendary Brian Charles Lara! 👍 👍#WIvIND | @BrianLara pic.twitter.com/ogjJkJ2m4q
முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது. "இரண்டு லெஜண்ட்ஸ், ஒரு பிரேம்!" என பதிவிட்டிருந்தது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
- இன்று கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவிலான சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இ.பி.எல்-ஐ (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) விட ஐபிஎல் தொடர் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.
- கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள்
- கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
புதுடெல்லி:
இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர்.
இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதேசமயம் காயமடைந்த கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3-வது உலகக்கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து சிறந்த அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆல்டைம் உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார். டோனி துணை கேப்டனாக இருக்கிறார். 11 பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலிக்கு இடமில்லை. அவர் 2 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்.
உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த லெவன் வருமாறு:-
1. தெண்டுல்கர்
சச்சின் இல்லாத ஒரு இந்திய கனவு அணியை கற்பனை செய்ய முடியாது, 6 உலகக்கோப்பையில் (1992- 2011) விளையாடி 2278 ரன் (44 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 56.95 அதிகபட்சமாக 152 ரன் குவித்துள்ளார். 6 சதமும், 15 அரை சதமும் இதில் அடங்கும். உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 1996, 2003, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.

2.கங்குலி
2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இவரும் சிறந்த தொடக்க வீரர் ஆவார். இலங்கைக்கு எதிராக 183 ரன் குவித்தது (1999) இன்றும் சாதனையாக இந்திய அணியில் உள்ளது. 3 உலகக்கோப்பை தொடரில் விளையாடி 1006 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 55.88 ஆகும். 4 சதமும், 3 அரை சதமும் அடித்துள்ளார்.
3. ராகுல் டிராவிட்
3-வது வரிசையில் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டவர். 1999 உலகக்கோப்பையில் ரன்களை குவித்தார். உலகக்கோப்பை தொடரில் 860 ரன் (21 இன்னிங்ஸ்) பெற்றார். இதில் 2 சதமும், 6 அரை சதமும் அடங்கும். சராசரி 61.42 ஆகும்.
4. மொகீந்தர் அமர்நாத்
1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை பெற்றார். திறமை வாய்ந்த ஆல்-ரவுண்டர். 254 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 21.16 ஆகும். 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
5. முகமது அசாருதீன்
3 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பணியாற்றியவர். இதில் 1996-ல் இந்தியாவில் நடந்த போட்டியில் அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றவர். மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு பலம் சேர்த்தவர். 1987-ல் இந்திய அணி அரை இறுதியில் நுழைய காரணமாக திகழ்ந்தார். 8 அரை சதத்துடன் உலகக்கோப்பையில் 826 ரன்கள் எடுத்துள்ளார்.
6. யுவராஜ் சிங்
சுழற்பந்து ஆல்-ரவுண்டர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தொடர் நாயகன் விருதை பெற்றார். 2003 மற்றும் 2011 உலககோப்பையில் சில ஆட்டங்களில் அதிரடியான ஆட்டம் மிகவும் பலன் அளித்தது. 3 உலகக்கோப்பையில் விளையாடி 738 ரன் எடுத்து உள்ளார். சராசசி 52.71 ஆகும். 1 சதமும், 6 அரைசதமும் அடித்துள்ளார்.
7.டோனி (துணைகேப்டன்)
இந்திய ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர். உலகின் சிறந்த கேப்டனில் ஒருவர். 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் உலககோப்பையை பெற்றுக்கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 2015-ல் அணியை அரைஇறுதி வரை அழைத்து சென்றார். உலககோப்பை தொடரில் 507 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42.25 ஆகும். 3 அரைசதம் அடங்கும். 27 கேட்ச் பிடித்துள்ளார். 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

8. கபில்தேவ் (கேப்டன்)
ஆல்-ரவுண்டர் திறமையில் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ல் அப்போதைய ஜாம்பவான் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி உலககோப்பையை வென்று பெருமை சேர்த்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்து சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் இறுதிப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்சை நீண்ட தூரம் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்றும் மறக்க இயலாத ஒன்றாகும். 669 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.16 ஆகும். 28 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
9. ஸ்ரீநாத்
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவர் 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். 34 ஆட்டத்தில் 44 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 30 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும்.
10. கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீரர் கும்ப்ளே. 1996 உலககோப்பையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியான இருந்தது. அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். 31 விக்கெட்டுகளை உலகக்கோப்பையில் கைப்பற்றினார்.
11. ஜாகீர்கான்
இந்திய அணியின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 2003 மற்றும் 2011 உலககோப்பையில் இவரது பங்களிப்பு சிறப்பானது. 23 ஆட்டத்தில் விளையாடி 44 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.
12-வது வீரராக தேர்வான விராட் கோலி 2 உலககோப்பையில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும்.

இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.
இவர் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து வருகிறார். அந்த அணி எங்கெல்லாம் சென்று விளையாடுகிறதோ, அங்கெல்லாம் சச்சின் செல்கிறார். இதனால் அவர் ஆலோசகராக செயல்படுகிறார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இரட்டை ஆதாயம் தரும் பதவி வகிக்கிறார் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சஞ்சீவ் குப்தா என்பவர் பிசிசிஐ-யின் குறைதீர்க்கும் அதிகாரியிடம் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்த எந்தவொரு ஆதாயமும் பெறவில்லை. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் தேர்வு அல்லது மற்ற எந்தவொரு பதவியிலும் இல்லை’’ என அவர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்களே பெரும்பாலும் உலக கோப்பை அணியிலும் தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது. ஓரிரு இடத்துக்கு மட்டுமே புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்கு ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் போட்டியில் உள்ளனர். இதில் ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. லோகேஷ் ராகுல் 3-வது தொடக்க வீரராக இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பை கவனித்து வரும் லோகேஷ் ராகுல் 2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்கும் பரிசீலனை செய்யப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
4-வது வீரருக்கான வரிசையில் அம்பத்தி ராயுடு, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடையே போட்டி நிலவும். 4-வது சிறப்பு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய முடிவு செய்தால் உமேஷ் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:-
விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா.
இதேபோல் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது. #BCCI #WorldCup2019 #India
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது.
4-வது வீரர் வரிசை, ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீரர்கள், 2-வது விக்கெட் கீப்பர் ஆகியவை தேர்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #WorldCup2019
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #Sreesanth #SC