இந்தியா

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

Update: 2022-08-13 07:26 GMT
  • பிரியங்கா காந்தி மீண்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • சோனியா காந்தி 3-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 1 மாதத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார். இந்த நிலையில் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா காந்தி மீண்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் சோனியா 3-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News