செய்திகள்
பரிசோதனை

இளம் வயதினரை இரண்டாவது முறையாக தாக்கும் கொரோனா -லான்செட் ஆய்வு

Published On 2021-04-29 10:11 GMT   |   Update On 2021-04-29 13:24 GMT
கடந்த கால கொரோனா நோய்த்தொற்று, இளைஞர்களை மறுபாதிப்பில் முழுமையாகப் பாதுகாக்காது என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்கும் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனினும், ஒரு குறிப்பிட்ட காலம்தான் இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனைக் கொண்டிருக்கின்றன. அதன்பின்னர், மீண்டும் கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அவ்வகையில், அமெரிக்காவின் இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இளம் வயதினருக்கு கொரோனா இரண்டாவது முறை தாக்கும் வாய்ப்பு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையில் உள்ள 3000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், 18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள்.

 

கடந்த கால கொரோனா நோய்த்தொற்று, இளைஞர்களை மறுபாதிப்பில் முழுமையாகப் பாதுகாக்காது என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். 

முந்தைய தொற்றுக்கு பிறகு உடலில் ஆன்டிபாடிகள் இருந்தபோதிலும், நோயெதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கவும், மீண்டும் தொற்று ஏற்படுபதை தடுக்கவும், தொற்று பரவுவதைக் குறைக்கவும் தடுப்பூசி இன்னும் அவசியம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இளைஞர்கள் முடிந்தவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆய்வு முடிவு லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News