செய்திகள்
சோனியா காந்தி - ராகுல் காந்தி

தேசிய பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது - காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

Published On 2021-01-22 11:52 GMT   |   Update On 2021-01-22 12:43 GMT
விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

 பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விவாதிக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் உணர்வற்ற அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது.

பாலகோட் தாக்குதல்  தொடர்பாக டிவி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் அரட்டைகள் கசிந்திருப்பது  அரசாங்கத்தின் மவுனம் கலையவில்லை. இன்று தேசிய பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

தேசபக்தி மற்றும் தேசியவாத சான்றிதழ்களை மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் இப்போது முற்றிலும் அம்பலமாக உள்ளனர் என கூறினார்.

Tags:    

Similar News