செய்திகள்
பிரதமர் மோடி

பாஜகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி - பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைக்கிறார்

Published On 2019-07-02 11:53 GMT   |   Update On 2019-07-02 11:53 GMT
பா.ஜ.கவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் பா.ஜ.க. நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு  தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் அமித் ஷா, அதன் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் பாராட்டப்பட்டனர். எம்.பி.க்கள் மக்கள் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும், இதனால் அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்று அறியப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி  வரைவிற்குள்ளும் குறைந்தது ஐந்து மரங்களை நடவேண்டும் என்று பிரதமர் மோடி கட்சி தொண்டர்களிடம் கூறியுள்ளார். கட்சி எம்.பி.க்கள், யாராவது தங்கள் நடத்தை மூலம் கட்சிக்கு கெட்ட பெயரைக் கொண்டுவந்தால் அதனை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என பிரதமர் மோடி கூறியதாக கட்சிவட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.



பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் மகன் ஆகாஷ் விஜயவர்கியா அரசு அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதி பிரதமர் மோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் தொடங்கவுள்ளார்.

இதேபோல், பாஜக தலைவர் அமித்ஷா தெலுங்கானாவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிற கட்சித் தலைவர்களும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க உள்ளனர்.
Tags:    

Similar News