செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் குமாரசாமி சந்திப்பு

Published On 2019-06-19 12:45 GMT   |   Update On 2019-06-19 12:45 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி இன்று சந்தித்துப் பேசினார்.
பெங்களூரு:
 
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தேசிய அளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கர்நாடகா மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் படுதோல்வி அடைந்ததால் அம்மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  இன்று உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல் மந்திரி குமாரசாமி, மன வேதனையுடன் நாட்களை கடந்து செல்வதாக உருக்கமாக தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் முதல் மந்திரி குமாரசாமி இன்று திடீரென சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார்.
Tags:    

Similar News