செய்திகள்

அமேதி உணவு பூங்கா விவகாரத்தில் ராகுல் பொய் சொல்கிறார்: ஸ்மிரிதி இரானி

Published On 2019-04-30 02:14 GMT   |   Update On 2019-04-30 02:14 GMT
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மெகா உணவு பூங்கா அமைப்பதற்கு பாஜக பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக ராகுல் கூறியதற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ராகுல் பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #Smritiirani
அமேதி :

உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மெகா உணவு பூங்கா அமைப்பதற்கு பா.ஜனதா பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இது உண்மை இல்லை என அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ராகுல் காந்தி கூறும் அந்த உணவு பூங்காவுக்கு கியாஸ் வினியோகம் செய்வதில்லை என முடிவு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அரசுதான் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து இருந்தது. அது ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பொய்களை கூறி ராகுல் காந்தி மக்களை தவறாக வழிநடத்துகிறார்’ என்று தெரிவித்தார்.



விவசாயிகளின் நலன் குறித்து ராகுல் காந்தி பேசிவரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொழிற்சாலைகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய ஸ்மிரிதி இரானி, இந்த நிலங்களை திருப்பிக்கொடுக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டு 3 ஆண்டுகள் கடந்த பிறகு கூட இன்னும் அந்த நிலங்கள் திருப்பி வழங்கப்படவில்லை எனவும் கூறினார். #RahulGandhi #Smritiirani
Tags:    

Similar News