செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தந்தை பாஜகவில் இணைந்தார்

Published On 2019-02-04 08:53 GMT   |   Update On 2019-02-04 08:53 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தந்தை, பிரதமர் மோடியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். #SambaRally #PMModi
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி ராணுவ வீரரான அவுரங்கசீப், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக்கொன்றனர்.

இதனையடுத்து பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஜவான் அவுரங்கசீப்புக்கு சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் விஜய்பூரில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் தந்தை முகமது ஹனீப் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் ஷர்மா ஆகியோர் மோடியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அப்போது, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா உடனிருந்தார்.

ஏழைகளுக்கான கொள்கைகள் கொண்ட பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், முந்தைய அரசாங்கத்தினைப் போல் அல்லாமல் மோடி அரசு சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் ஹனீப் தெரிவித்துள்ளார்.  #SambaRally #PMModi

Tags:    

Similar News