search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu kashmir"

    • கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
    • காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.

    கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

    பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
    • பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரை.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (20-ந் தேதி) ஜம்மு செல்கிறார். அங்கு காலை 11-30 மணியளவில், ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலதுறைகளுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் இதில் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

    மேலும், விக்சித் பாரத் விக்சித் ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தார்.
    • முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பினார். 

    தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மெகபூபா சென்றுக் கொண்டிருந்த வாகனம் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெகபூபாவின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிடிபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
    • ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.

    ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் படுகாயமடைந்து 8 ஆண்டு கோமாவில் இருந்த ராணுவ வீரர் மரணமடைந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் ஹாஜி நகா கிராமத்தில் 2015, நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் இந்திய ராணுவம் ஒரு ஆபரேஷனை நடத்தியது. குப்வாராவின் கலரூஸ் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்னல் கரன்பீர் சிங் நாட் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கர்னல் கரன்பீர் சிங் கோமா நிலைக்குச் சென்றார்.

    தனது கணவர் கண் விழிப்பார் என அவரது மனைவியும், அவரது குழந்தைகளும் 8 ஆண்டாகக் காத்திருந்தனர்.

    இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று கர்னல் கரன்பீர் சிங் நாட் காலமானார். அவர் 20 ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர், கடந்த 1998-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். அங்கு பல்வேறு பிரிவுகளில் 14 ஆண்டு பணிபுரிந்த இவர் அதன்பின் பிராந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை புரிந்தார்.

    கர்னல் கரன்பீர் சிங் நாட் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நாம் பாகிஸ்தானுடன் ஏன் பேசத் தயாராக இல்லை? என கேள்வி எழுப்பினார்.
    • அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என்றார் பரூக் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

    நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.

    அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.

    நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என தெரிவித்தார்.

    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் கண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது ஷபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.

    • பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைில் இந்திய பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தும்போது, வீரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதனால் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதியில் அடிக்கடி வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    நேற்று பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருந்தபோதிலும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் பூஞ்ச் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நேற்று பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்களின் தியாகத்தை வைத்து நீங்கள் (பா.ஜனதா) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா?. 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தை வைத்து வாக்கு கேட்க விரும்புகிறீர்களா?.

    பூஞ்ச் தாக்குதல் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அதன்பின் அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.
    • இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில் 4 வீரர்கள் வீரமரணம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரியில் தேரா கி காலி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் இதேபோன்று ராஜோரியில் நடைபெற்ற பயங்கர சண்டையில் இரண்டு கேப்டன்கள் உள்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    • ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

    ஜம்மு காஷ்மீர்:

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றனர்.

    • கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.

    லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நிமிடங்கள் இடைவௌியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று லேசான தீவிர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் கூற்றுபடி, இன்று மாலை 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் 4.8 மற்றும் 3.8 தீவிரம் கொண்ட இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.

    ×