இந்தியா

ரேவண்ணா மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல்

Published On 2024-05-03 11:39 GMT   |   Update On 2024-05-03 11:39 GMT
  • பிரஜ்வல் வீட்டில் வேலைப் பார்த்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா மீது வழக்கு.
  • தற்போது பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ள நிலையில், ஆட்கடத்தல் வழக்குப்பதிவு.

கர்நாடகா மாநிலத்தில் மக்களவை எம்.பி.யாக உள்ள தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டிடில் வேலைப்பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக ரேவண்ணா நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கக்கூடிய பிரிவில்தானே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு ஏன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார்.

இந்த நிலையில் தனது தாயார் கடத்தப்பட்டுள்ளதாக ரேவண்ணா மீது இளைஞர் ஒருவர் மைசூரு கே.கே.ஆர். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரேவண்ணா அழைத்ததாக தனது தாயாரை அவரது உதவியாளர் அழைத்துச் சென்றார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலீசார் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு ரேவண்ணா செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

Tags:    

Similar News