இந்தியா

சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

Published On 2026-02-16 15:14 IST   |   Update On 2026-02-16 15:14:00 IST
  • முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது.
  • தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

மத்திய கல்வி பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக் கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும் 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

Tags:    

Similar News