செய்திகள்

பாஜக எவ்வளவு முயன்றாலும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது: சித்தராமையா

Published On 2018-12-04 02:15 GMT   |   Update On 2018-12-04 02:15 GMT
பா.ஜனதாவினர் எவ்வளவு முயன்றாலும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #BJP
மங்களூரு :

மங்களூரு நேரு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை கையில் எடுத்து எப்படியாவது கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பா.ஜனதாவினர் கனவு கண்டு வருகிறார்கள். அவர்கள் (பா.ஜனதாவினர்) எவ்வளவு முயன்றாலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.



பா.ஜனதாவுக்கு தனி பெரும்பான்மை இல்லை என்பதை முதலில் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் நாளில் இருந்தே அவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகிறது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதாவினர் ரூ.25 கோடி பேரம் பேசுகிறார்கள்.

அவ்வளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது. அவை அனைத்தும் ஊழல் பணம். பா.ஜனதாவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டு தான் உள்ளனர். பின்வரும் நாட்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். நான் (சித்தராமையா) பா.ஜனதாவுக்கு சென்றால் சேர்த்து கொள்வோம் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். அவருக்கு (ஈசுவரப்பா) மூளை கிடையாது. அவருடைய பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #BJP
Tags:    

Similar News