செய்திகள்

மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சிக்கிறார் - மோடி மீது அகிலேஷ் குற்றச்சாட்டு

Published On 2018-07-29 23:16 GMT   |   Update On 2018-07-29 23:16 GMT
மக்களிடம் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். #Modi #UP #YogiAdityanath #AkileshYadav
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், மக்களிடம் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, இளைஞர்களுக்கு ஏற்பட்டு வரும் மன அழுத்தம், பணவீக்கம் அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகளில் பாஜக தலைவர்கள் அடிப்படையற்ற அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி உ.பி. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார். ஆனால், மாநில அரசு சிறப்பான எந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை.

யோகி அரசு ஏழை விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. ஏற்கனவே 15 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டணத்தை மாநில அரசு இன்னும் வழங்காமல்  இழுத்தடித்து வருகிறது. 15 நாட்களில் விவ்சாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் என உறுதியளித்த பாஜகவினர் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். #Modi #UP #YogiAdityanath #AkileshYadav
Tags:    

Similar News