செய்திகள்

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு - கடுப்பில் பாஜக

Published On 2018-05-10 16:16 GMT   |   Update On 2018-05-10 16:16 GMT
மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்துள்ளது. #Congress #ShivSena
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த பதாங்ராவ் கதாம் கடந்த மாதம் காலமானார். இதனை அடுத்து, வரும் 28-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பதாங்ராவின் மகன் விஷ்வஜீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜக - சிவசேனா கூட்டனி ஆட்சி அம்மாநிலத்தில் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.

மறைந்த பதாங்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என சிவசேனா கட்சி விளக்கம் அளித்துள்ளது. 
Tags:    

Similar News