செய்திகள்

யோகாசனம் ஒன்றே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி: துணை ஜனாதிபதி பேச்சு

Published On 2017-12-24 13:50 GMT   |   Update On 2017-12-24 13:50 GMT
ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகாசனம் ஒன்றே சிறந்த வழி என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

மும்பை சான்ட்டாகுருஸ் பகுதியில் புதிய யோகாசன பயிற்சி நிலையத்தை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ’இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நம்மால் உடல் பயிற்சி செய்வது கடினமாக உள்ளதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்மை தகுதியுடையவர்களாக வைத்துக்கொள்ள யோகாசனம் ஒன்றே வழியாகும். 

நாகரிக உலகத்துக்கு இந்தியா அளித்துள்ள பரிசான யோகாசனத்தை இந்து மதத்துடன் தொடர்புபடுத்தும் மக்கள் இந்து மதம் என்பது வாழ்க்கைக்கான வழிமுறை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சிலர் யோகாசனத்தை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்தி வருகின்றனர். 

யோகாசன கலைக்கும் மதத்துக்கும் தொடர்பு இல்லை. மாறாக, அமைதியான வாழ்க்கைக்கான அறிவியல் முறையாக யோகாசனம் திகழ்ந்து வருகிறது’ என்று கூறினார்.
Tags:    

Similar News