செய்திகள்

செல்போன் எண் - ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-10-30 06:49 GMT   |   Update On 2017-10-30 06:49 GMT
செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

செல்போன் எண்ணுடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவுறுத்தியது. அதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் போன் அழைப்புகள் செய்து இது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்காள அரசும் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இது குறித்து 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது தொடர்பாக தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்தி வைத்தது.
Tags:    

Similar News