செய்திகள்

என் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக தீர்த்துகட்ட பா.ஜ.க. சதி: லல்லு மனைவி குற்றச்சாட்டு

Published On 2017-09-15 12:55 GMT   |   Update On 2017-09-15 12:55 GMT
என் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக தீர்த்துகட்ட பா.ஜ.க. சதி செய்கிறது. மோடியிடம் நாங்கள் எப்போதும் அடிபணிய மாட்டோம் என பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
பாட்னா:

பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீது மத்திய அரசு சரமாரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் லல்லு வீட்டில் சி.பி.ஐ. சோதனையும், அவரது மகள் மிசா பாரதிக்கு சொந்தமான நிறுவனங்களில் பொருளாதார அமலாக்கதுறை சோதனையும் நடைபெற்றது. டெல்லியில் உள்ள மிசா பாரதியின் பண்ணை வீட்டை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

லல்லுவின் மகனும் பீகார் மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீதும் நடவடிக்களை எடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், லல்லு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ராப்ரி தேவி பாட்னா நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

’தற்போது தேஜஸ்வி யாதவை நோக்கி மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது. பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் அதற்கான வேலையில் மும்முரமாக உள்ளது. எங்கள் குடும்பத்தை எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ, அந்த அளவுக்கு எங்கள் மீது நடவடிக்கைகள் பாய்கிறது.

ஆனால், இந்த மாநில மக்கள் என் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். எந்த காரணத்தை கொண்டும் எனது கணவரோ, நானோ, எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களோ மோடியிடம் நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News