உலகம்

இந்தியா மேலும் அணுஉலைகள் கட்ட உதவி செய்ய தயார்: ரஷியா

Published On 2024-05-23 15:53 GMT   |   Update On 2024-05-23 15:53 GMT
  • அணுஆயுத சக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்த இந்தியாவோடு எங்களுடைய ஒத்துழைப்பை நீட்டிக்க தயாராக இருக்கிறோம்.
  • கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது உலைகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன்ம அணுஉலைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆறு லைட்-வாட்டர் அணுஉலைகள் கட்டுவதற்கு இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. ஒவ்வொரு அணு உலையும் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது.

இந்த திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2014-ல் முதல் அணுஊலை செயல்பட தொடங்கியது. 2-வது உலை 2016-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. மேலும் இரண்டு அணுஉலைகளுக்கான வேலை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியா வேறு இடத்தில் அணுஉலை கட்ட நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என ரஷியாவின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலெக்சி லிகாசெவ் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் அலெக்சி லிகாசெவ் இந்தியாவின் அணு சக்தி கமிஷன் தலைவர் அஜித் குமார் மெகந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அணுஆயுத சக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்த இந்தியாவோடு எங்களுடைய ஒத்துழைப்பை நீட்டிக்க தயாராக இருக்கிறோம். இது ரஷியாவால் வடிவமைக்கப்பட்ட உயர்திறன் கொண்ட அணுஉலைகளை இந்தியாவின் மற்றொரு இடத்தில் கட்டுவதற்கானதையும் உள்ளடக்கியதாகும்" என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மும்பையில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற செய்தி மாநாட்டின்போது "ரஷியாவின் அணுஉலைக்காக கூடுதலான இடங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News